தாருல் ஹுதா

ஓர் அறிமுகம்

எல்லாப் புகழும் அகிலங்களின் ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது ஓ அவர்களுக்கும், அவர் களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்டாகட்டும்!

இஸ்லாமியச் சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
தாருல் ஹுதாவை அறிமுகம் செய்வதன் வாயி லாக உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் தாருல் ஹுதாவின் நோக் கத்தையும் அதன் பணிகளையும் விவரிப்பதுடன் அதன் இன்றைய தேவைகளையும் தங்கள் முன் வைக்கிறோம்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாவர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்
பிடித்து, ஸகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். இத்தகை யவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக, அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாக வும் இருக்கின்றான்.” (அத்தவ்பா 9 : 71)
(நம்பிக்கையாளர்களே!) உங்கüல் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களி-ருந்து அவர் களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். (ஆலுஇம்ரான் 3 : 104)
நபி ஓ அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் (வெறுத்து விலகி விடட்டும்). இது ஈமானின் (நம்பிக்கையின்) குறைந்தபட்ச அளவாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: நம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசம் கொள்வதற்கும், கருணை காட்டுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் உதாரணம் ஒரே உடலைப்போல. உட-ல் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன. (ஸஹீஹுல் புகாரி)
இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும் முறையான வழி காட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, மேற் கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபி மொழிகளுக்கிணங்க சமுதாயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுவது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து, அல் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடையவேண்டும் என்ற தூய எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் தாருல் ஹுதா.

தாருல் ஹுதாவின் பணிகளும் தொண்டுகளும்

அழைத்தல்

இதுவே இஸ்லாமின் அடிப்படையாகும். உலகில் இப்பணி இறைத்தூதர்கள் வாயிலாக நிலை நிறுத்தப்பட்டது. இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவரின் மீதும் இப்பணி கடமையாக்கப்பட்டது. மேன்மைமிகு குர்ஆனும், சிறப்பு மிகு நபிமொழியும் இதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. எனவே, இயன்றளவு அனைத்து வழிகளிலும் மனித சமுதாயத்திற்கு இஸ்லாமை அறிமுகப்படுத்துவதும் அதன் உயர்வுகளை விளக்கிச் சொல்லி அதன் பக்கம் அழைப்பதும் தாருல் ஹுதாவின் முதல் பணியாகும்.

கற்பித்தல்

இஸ்லாமை அறிய விரும்பும் சிறுவர்கள்,
வாலிபர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மேன்மை மிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர் தகுதிக் கேற்ப கற்றுத் தருவது தாருல் ஹுதாவின் இரண்டாவது பணியாகும்.

நூல் வெளியிடுதல்

மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பேரறிஞர்களால் அரபி மொழியில் எழுதப்பட்ட நூற்களைத் தமிழிலும் ஏனைய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, அந்த நூற்களைச் சலுகை விலையிலும் முடிந்த அளவு இலவசமாகவும் மக்களுக்கு வழங்குவது தாருல் ஹுதாவின் மூன்றாவது

உதவுதல்

அல்லாஹுதஆலாவே அனைவரின் தேவை கள், துன்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்பவன். மிகப்பெரிய வள்ளலாகிய அல்லாஹ் தன் சார்பாக உலகில் ஏழை, எளியோர், நலிந் தோர் ஆகியோரின் துயர் துடைக்கும் வள்ளல் பெருமக்களுக்கு பெரும் வெகுமதிகளை ஈருல கிலும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். பிறர் துன்பங்களில் பங்கெடுப்பது, பிறர் தேவைகளை நிறைவேற்ற இயன்றவரை உதவுவது முஸ்-ம் களுடைய அடிப்படைப் பண்புகளாகும்.
இந்த உன்னதப் பணிக்காக ``பைத்துல்மால்' (பொது நிதி) ஏற்பாடு செய்து இரக்கச் சிந்தையும், மார்க்கப் பற்றும் கொண்ட வள்ளல் பெருமக்களிடமிருந்து கடமையான, உபரியான தர்மங்களைப் பெற்று அவற்றை தேவையுடையவர்களுக்கு வழங்குதல் தாருல் ஹுதாவின் நான்காவது பணியாகும்.

இந்தப் பணிகள் மட்டுமின்றி, இஸ்லாம் முழுமை யாக ஒவ்வொருவரின் வாழ்விலும் வரவேண்டும் என்பதற்காகவும், மனித சமுதாயங்களுக்குள் நல்லுறவும், அன்பும், கருணையும், சமூகப் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற் காகவும் இயன்றவரை அல்லாஹ்வுக்காகத் தொண்டாற்ற வேண்டும் என்பது தாருல் ஹுதா வின் குறிக்கோளாகும்.
இப்பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து சிறப்பாக, திறம்பட நடைபெறவும்,
அவற்றை அல்லாஹ் அங்கீகரிக்கவும், தாங்கள் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்வ துடன், தங்களால் இயன்ற வரை இப்பணிகளில் பங்கு பெறுமாறும் அழைக்கிறோம்.
மேற்கூறப்பட்ட பணிகளை விசாலப்படுத்தவும் மேன்மேலும் அவற்றைச் சிறப்புடன் நிறைவேற்றவும் தாருல் ஹுதாவிற்காக கீழ்க்காணும் அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன:
அதாவது, பள்ளிவாசல், வகுப்பறைகள், மிகப் பெரிய பொது நூலகம், மொழி பெயர்ப்புப் பணிக
ளுக்குரிய அறைகள், கருத்தரங்கங்கள் நடத்த
சகல வசதிகளுடன் கூடிய வளாகம், மார்க்கக்
கல்விகள் முழுநேர வகுப்புகளாக நடத்துவதற் குத் தேவையான கல்வி நிலையம், மாணவர்கள், விருந்தாளிகள், ஊழியர்கள் தங்குவதற்குரிய விடுதிகள், புத்தக விற்பனை நிலையம், பல மொழிகளில் இஸ்லாமிய நூல்கள் வெளியிடு வதற்குரிய மூலதனம், மாதாந்தரச் செலவுகளைப் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகள் போன்ற தேவைகள் உள்ளன.
நல்லுள்ளம் கொண்ட மேன்மக்களே! நீங்கள் கொடுக்கும் தர்மங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கு நிச்சயம் பேருத வியாக இருக்கும்.
உங்களால் முடிந்த அளவு பங்கு கொண்டு ஈருலக நற்பேறுகளை அடைந்து கொள்ளுங்கள்! மார்க்கத்திற்காகக் கொடுக்கப்படும் தர்மங்க ளுக்குச் சிறப்புகளும் நன்மைகளும் ஏராளம் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்ததே!
முடிந்த உதவிகளை மறுமையின் வீட்டை நாடி, அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக தந்து உதவுங்கள்.
நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்காக நன்மை யில் எதை முற்படுத்திக் கொள்கிறீர்களோ அதைத்தான் அல்லாஹ்விடத்தில் மிகச்
சிறந்ததாகவும், மகத்தான கூலியாகவும் பெற்றுக் கொள்வீர்கள். (அல்குர்ஆன் 73 : 20)
பேராற்றலுடைய அல்லாஹ் இந்த நல்ல திட்டங்களை நிறைவேற்றித்தரப் போதுமானவன்! அவனிடமே உதவி தேடுகிறோம்! அவனையே
முன்னோக்கி நிற்கிறோம்!