Categories: கவலைப்படாதே!

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 3

(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து)

தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

31. அல்லாஹ் உனக்கு தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! உனது நலன் எது

என்பதை நீ அறிய மாட்டாய். சில வேளை வசதியைவிட வறுமையே சிறந்ததாக அமையலாம்.

(சிலர் ஏழையாக இருக்கும் போது இறைவழிபாடு, இறை அச்சத்துடன் இருக்கின்றனர். பிறகு,

செல்வம் வந்தவுடன் அல்லாஹ்வை மறந்து விடுகின்றனர்.)

32. சோதனை உனக்கும் அல்லாஹ்விற்கும¢ இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது;

உன்னை விட்டும் பெருமை, ஆணவம், கர்வத்தை போக்கி விடுகிறது.

33. “நீ உனக்குள் அருட்கொடைகளின் குவியல்களையும் அல்லாஹ் உனக்கு வழங்கிய

எத்தனையோ செல்வங் களின் பொக்கிஷங்களையும் சுமந்திருக்கிறாய்’’ என்பதை மறந்து

விடாதே!

34. மக்களுக்கு நன்மை செய்! அடியார்களுக்கு நல்லதை நாடு! நோயாளியை நலம் விசாரி!

ஏழைகளுக்கு கொடு! அநாதைக்கு கருணை காட்டு! மகிழ்ச்சி அடையவய்!!

35. கெட்ட எண்ணங்களை தவிர்த்துக் கொள்! வீண் கற்பனைகளை விட்டும் தேவையற்ற

சிந்தனைகளை விட்டும் விலகி விடு.

36. சோதனை உனக்கு மட்டும் இல்லை. கவலை யாருக்குத்தான் இல்லை, துன்பமற்றோர்

இவ்வுலகில் உண்டா?!

37. உலகம் சோதனைகள், வேதனைகள், குழப்பங்கள் நிறைந்த ஒரு வீடு. அதை அப்படியே

ஏற்றுக் கொள்! அல்லாஹ்விடம் உதவி தேடு!

38. உனக்கு முன் சென்ற பலரைப் பற்றி நினைத்துப்பார். சிலர் பதவி இழந்தனர், சிலர்

சிறைப்பட்டனர், சிலர் துன்புறுத்தப்பட்டனர், சிலர் சொத்துக்களை இழந்தனர், சிலர்

தண்டிக்கப்பட்டனர்.

39. உனக்கு ஏற்பட்ட கவலை, துக்கம், பசி, வறுமை, நோய், கடன் மற்றும் பல சோதனைகள்

அவை அனைத்தும் உமக்கு அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடித் தரக்கூடியவை.

40. துன்பங்கள்தான் செவிகளையும் பார்வைகளையும் திறக்கின்றன, உள்ளத்தை

உயிர்ப்பிக்கின்றன, ஆன்மாவை தீமையிலிருந்து தடுக்கின்றன, அடியானுக்கு நல்லறிவை

புகட்டுகின்றன, நன்மை களை அதிகப்டுத்துகின்றன.

41. பிரச்சனைகளை எதிர்பார்க்காதே! தீமைகளைத் தேடாததே! புரளிகளை நம்பாதே!

Page 4 of 75

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா?

42. பெரும்பாலான பயங்கள் நிகழ்வதில்லை, கேள்விப் பட்ட சிரமங்கள் எல்லாம் வந்து

விடுவதில்லை, அல்லாஹ் இருக்கிறான்; அவன் பாதுகாப்பான், அவன் கவனித்துக் கொள்வான்,

அவன் உதவுவான்.

43. வெறுப்பவர்கள், அலட்டிக் கொள்பவர்கள், பொறாமைக்காரர்கள் ஆகியோரிடம்

பழகாதே! அவர்கள் உயிரின் நோய்கள், கவலைகளின் சுமை தாங்கிகள்.

44. தொழுகைகளை தக்பிரதுல் இஹ்ராமுடன் (முதல் தக்பீருடன் முதல் வரிசையில்)

தொழுவதில் கவனம் செலுத்து.

45. மஸ்ஜிதில் அதிக நேரத்தைக் கழி! தொழுகைக்காக விரைந்து செல்! மகிழ்ச்சியை

காண்பாய்!!

46. பாவங்களை விட்டு விலகி இரு! அவைதான் கவலைகள் மற்றும் துக்கங்களின்

பிறப்பிடங்கள், துன்பங்களின் காரணங்கள், சோதனைகள் மற்றும் பிரச்சனைகளின் வாசல்கள்

ஆகும்.

47. ‘லா யிலாஹ இல்லா அன்த சுப்ஹானக்க இன்னீ குன்து மினள் ளாலிமீன்’ என்ற

திருவாசகத்தை அதிகம் ஓதிவா! துயரங்களை நீக்குவதில், இன்னல்களை களைவதில் அது

உனக்கு கை கொடுக்கும்.

48. உன்னைப் பற்றி பேசப்படும் அருவருக்கத்தக்க, தீய பேச்சுகளால் நீ கலங்க வேண்டாம்.

அது உனக்கு தீங்கிழைக்கா. அவற்றை கூறியவருக்குத்தான் அவை தீங்கிழைக்கும்.

49. உன் எதிரிகள் உன்னை ஏசுவதும் உனது பொறாமைக் காரர்கள் உண்னைத் திட்டுவதும்

உனது மதிப்புக்குச் சமமானது. அதாவது நீ ஒரு முக்கியமான மனிதனாக வும் பேசப்படுகிற ஒரு

நபராகவும் ஆகிவிட்டாய்.

50. வணக்க வழிபாட்டில் உன்மீது கடினப்படுத்திக் கொள்ளாதே!